மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு
பாதாள உலகத் தலைவராகக் கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரைக் கொண்ட நபரின் குடும்பத்தினர் நியாயமற்ற முறையில் தவறாக அடையாளம் காணப்பட்டு பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உண்மையான முகமது அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்துள்ளார்,
மேலும் இந்தக் கொலை தொடர்பாக பெப்ரவரி 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தப் பெயரைக் கொண்ட உண்மையான நபர் அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்நுவான் ஜெயவர்தனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தாசுன் பெரேரா, பொலிஸார் மற்றொரு நபரை தடுத்து வைத்திருப்பதாகவும், முகமது அஸ்மான் ஷெரிப்தீனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இரண்டு வௌ;வேறு நபர்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தவறான அடையாளம் ஷெரிப்தீனின் குடும்பத்துக்கு சட்ட மற்றும் சமூக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் கூறினார்,
மேலும் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றத்தைக் கோரினார். சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர் இன்னும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரது கட்சிக்காரர் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் தலைமையகத்துக்கு ஐ.ஜி.பி.யின் கட்டளைத் தகவல் பிரிவால் வழங்கப்பட்ட தினசரி சம்பவ அறிக்கையும், இங்கு கொலை சந்தேக நபர் முகமது அசாம் ஷெரீப்தீன் என்ற முன்னாள் கமாண்டோ வீரர் என்று கூறியிருந்தது.
இருப்பினும், கொலைச் சந்தேக நபர் சமிந்து தில்ஷான் கந்தனாராச்சி என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது கொழும்பு குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர், சிங்களவரா
முஸ்லிமா? அல்லது, ஒரே நபர் இரண்டு பெயர்களிலும் தோன்றுகிறாரா என்பது குறித்து இன்னும் விசாரித்து வருகிறது.
இதற்குக் காரணம், முகமது அசாம் ஷெரிப்தீனின் உறவினர்கள் நேற்று (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்ததே ஆகும்.
Post a Comment