Header Ads



தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா


(றியாஸ் ஆதம்)


புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் அல் ஆலிம், அல் ஹாபில் 3வது பட்டமளிப்பு விழா என்பன இன்று (9) அக்கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், அதிபருமான தேசமான்ய, தேசகீர்த்தி அஷ்ஷேஹ் அஷ்ரப் முபாறக் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் பாத்லி ஹிசாம் ஆதம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.


அத்துடன் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி, மௌலானா ஹாபிஸ் ஹாரி எம்.எம்.சுலைமான் ஆலிம் மஹ்லரி ஆகியோர் பிரதம பேச்சாளராகவும் கலந்துகொண்டார்.


அத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம்.தாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.


உள்நாட்டு, வெளிநாட்டு உலமாக்கள், கல்விமான்கள் புத்திஜீவிகள், முக்கியஸ்தர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் நினைவு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் 9 மாணவர்களுக்கு அல் ஆலிம் பட்டமும் 7 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.