Header Ads



வீண். விரயம் செய்யாதீர்கள்...


இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்.


உலகில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  821 மில்லியனை எட்டியிருக்கிறது, அதாவது ஒன்பது பேருக்கு ஒருவர் பட்டினியாய் விடப்பட்டுள்ளார்கள்


“மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை”. ✍அல்குர்ஆன் 7:31


முகம்மது நபிﷺ  கூறினார்கள்:


“ஆம், எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! மறுமை நாளில் விசாரணையின்போது இந்த அருட்கொடைகளைக் குறித்து  அல்லாஹ் விசாரிப்பான்”.


❤பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைக் குறித்து கட்டாயம் நீங்கள் வினவப்படத்தான் போகின்றீர்கள்”  ✍அல்குர்ஆன் 102:08


விரயம் செய்வோரை இறைவன் விரும்ப மாட்டான்'  அனுமதிக்கப்பட்டவற்றிலும், தடை செய்யப்பட்டவற்றிலும் அல்லாஹ் விதித்துள்ள எல்லையை மீறுவோரை அவன் நேசிப்பதில்லை. 


 உணவை வீணடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. நாம் வீணடிக்கும் உணவின் ஒவ்வொரு பருக்கையும் ஏதோ ஓர் ஏழைக்குரிய உணவு என்பதை  மட்டுமல்ல, இதுகுறித்தும் மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறந்துவிடலாகாது.


நீ விரும்பியதை உண்ணலாம்; விரும்பியதை அணியலாம்.  ஆனால், ஒரு நிபந்தனை:  விரயமும், கர்வமும் உன்னிடம்  இருக்கக் கூடாது.


யா அல்லாஹ்! பசி பட்டினி  உணவுப்  பற்றாக்குறை வறுமை இவைகளிலிருந்து  எங்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வாயாக  யா ரஹ்மானே

No comments

Powered by Blogger.