Header Ads



இந்தியாவின் முடிவுக்கு, இங்கிலாந்து கெப்டன் எதிர்ப்பு


இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது. 


குறித்த போட்டியில் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-1 எனும் அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது. 


இந்தநிலையில் நேற்றைய போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய சிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான விடயம் கிடையாது என இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 


போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். 


அத்துடன் “நாங்கள் துடுப்பெடுத்தாட களமிறங்கியபோது இந்திய அணியில் ஹர்ஷித் ராணா உள்ளதை அவதானித்தோம், இது தொடர்பில் கேட்டபோது சிவம் துபேவிற்கு மாற்றாக வந்துள்ளார் என கூறினார்கள். அப்போதே அதனை ஏற்க மறுத்தேன். இந்தநிலையில் நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவையெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்” என ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.