Header Ads



ரோஹின்யர்களை திருப்பி அனுப்பக் கூடாது - UNHCR ஜனாதிபதிக்கு கடிதம்


முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹின்யா முஸ்லிம்களை, மீண்டும் மியன்மாருக்கு திருப்பியனுப்பக்கூடாது என வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்காக உயர் ஸ்தானிகர் காரியாலயம், ஜனாதிபதிக்கு அவசர கடிதெமொன்றை அனுப்பி வைத்துள்ளது.


இன்று  திங்கட்கிழமை (06) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அர்ஷாட் நிசாந்தீன், மிப்லாள் மௌலவி ஆகியோர் என ஐ நா சபை கொழும்பில் அமைந்துள்ள  காரியாலயத்தில், அங்குள்ள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் அறிய வந்துள்ளது.


முல்லைத்தீவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை, பாதுகாப்பான மூன்றாம் நாடொன்று அனுப்ப முடியுமென்றும், சுட்டிக்காட்டி, அகதிகளுக்காக உயர் ஸ்தானிகர் காரியாலயம், ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு  அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், கொழும்பில் உள்ள ஐ.நா. அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.