Header Ads



SJB எடுத்துள்ள தீர்மானம்


பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.


இந்தக் குழுக்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். 


பொது நிதிக் குழுவில் மட்டுமே எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நிதிக்குழு கூட்டம் நடைபெறுவதால் SJB உறுப்பினர்கள் அதில் மாத்திரம் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.