இம்தியாஸ், கபீர், அடங்கலாக SJB யில் மாற்றங்கள் பற்றி ஆராய 4 பேர் கொண்ட குழு
நேற்று -09- நடைபெற்ற கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் உள்ளடக்கத்திற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையினரின் ஆதரவான கருத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க சஜித் பிரேமதாச இந்த தீர்மானத்தை எடுத்தார்.
இதனிடையே, கட்சியின் முகாமைத்துவக் குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையும், மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை செயற்குழு கூடுவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment