Header Ads



PUCSL மின் கட்டணத்தை குறைத்ததே தவிர, அரசாங்கம் அல்ல - பொய்யாக NPP நற்பெயர் பெற முயற்சி


மின்சாரக் கட்டண குறைப்பிற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொய்யாகக் நற்பெயரைப் பெற முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குற்றஞ்சாட்டினார்.


ஊடகவியலாளர்களிடம் பேசிய பெரேரா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுதந்திரமாக கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்ததே தவிர அதை அரசாங்கம் செய்யவில்லை என்றார். அத்தகைய கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


"ஒரு ஜே.வி.பி தலைவர் கூட PUCSL முன் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பேசவில்லை," என பெரேரா கூறினார்.

No comments

Powered by Blogger.