NPP எம்.பி. யை பேஸ்புக்கில் விமர்சித்தவர் கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரம்முனி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை அகுருவாதோட்ட படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரம்முனி, அண்மையில் தனது பேஸ்புக் கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை இழிவுபடுத்தும் வகையில் பதிவொன்றை இட்டிருந்தார்.
பின்னர் அந்த பதிவை அன்றே நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment