வாழ்நாள் சாதனை, தங்க விருது பெற்றார் NM அமீன்
இலங்கையில் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனம் ஆகிய வருடா வருடம் நடாத்திவரும் ஊடகத்துறை ஜாம்பவான் விருது வழங்கி கௌரவித்தது விழா நேற்று நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுடன் இந்நிகழ்வு 25 ஆவது ஆண்டு விழாவாக நேற்று கல்கிசை பீச் ஹோட்டலில் இந்நிறுவனங்களின் இணைத் தலைவர்களாக குமார் நடேசன், மற்றும் சிறிய ரணசிங்க ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு முன்னாள் பேராசிரியர் சாவித்ரி குணசேகர அதிதியாக கலந்து கொண்டார்.
இம்முறை பத்திரிகைத்துறையில் சிரேஷ்ட 5 பத்திரிகையாளர்களுக்கு வாழ்நாள் சாதனை தங்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சந்திரிக்கா விஜேசுந்தர, என்.எம்.அமீன், பெனாட் ரூபசிங்க, ஜெனிட்டா கரீம், மற்றும் யோகமுத்தி , ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் விருதுகள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களின் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இலங்கையில் வெளிவரும் மும்மொழி பத்திரிகைகளிலும் இந்த ஆண்டின் சிறந்த ஊடகவியளாளர்கள் மேர்வின் சில்வா விருது. உபாலி விஜயவர்த்தன விருது சுப்பிரமணிய செட்டியார் விருது, பேராசிரியர் கைலாசபதி விருது. டி.ஆர்.விஜயவர்த்தன விருது என 20 துறைகளில் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment