Header Ads



ஆட்டோவில் பாராளுமன்றம் சென்ற Mp


தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், முச்சக்கர வண்டியில் சென்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார். 


நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வுக்கு அவர் இவ்வாறு சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 


வவுனியாவில் இருந்து பேருந்தில் கொழும்பு சென்ற அவர் அங்கு தனது விடுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் நாடாளுமன்றம் சென்று அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.


ஆடம்பரமின்றி மக்களைப் போல் இவ்வாறு சென்றதாக ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.