Header Ads



Dr அர்ச்சுனா குறித்து சபாநாயகரின் அறிவிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று -07- பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக, சபையில் பேசும் உரிமையை பறித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அதுகுறித்து வினவியபோதே சபாநாயகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகரின் ஆலோசனைக்காக எதிர்க்கட்சி காத்திருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


எம்.பி.அர்ச்சுனா , அண்மைக்காலமாக தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.