Header Ads



(Design Law Treaty) சான்றளிக்கும் நிகழ்வில் சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் கைச்சாத்து



உலக அறிவுசார் சொத்து அமைப்பின் சர்வதேச வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்துக்கு (Design Law Treaty) சான்றளிக்கும் நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் கைச்சாத்து. 


உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) இராஜதந்திர மாநாடு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்றது. உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) 193 உறுப்பு நாடுகள் 20 வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வடிவமைப்பு சட்ட உடன்படிக்கைக்கு (Design Law Treaty) ஒப்புதல் அளித்தனர். 


இச்சர்வதேச சட்டத்தை அங்கீகரித்து சான்றளிக்கும் நிகழ்வில் சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவரும் WIPO இராஜதந்திர மாநாட்டுக்கான இலங்கைத் தூதுக் குழுவின் தலைவருமான அமீர் அஜ்வத் இலங்கை சார்பில் கைச்சாத்திட்டார். இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கீதாஞ்சலி ரணவக்க இலங்கை தூதுக்குழுவில் அங்கம் வகித்தார்.


"ரியாத் வடிவமைப்பு ஒப்பந்தம்" (Riyadh Design Treaty) என்று பெயரிடப்பட்டுள்ள இச்சர்வதேச சட்டம், வடிவமைப்புகளைப் (Designs) பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், வடிவமைப்பாளர்களுக்கு உள்நாட்டு சந்தைகளிலும் வெளிநாட்டிலும் தங்கள் படைப்புகளை பாதுகாப்பதை எளிதாக்குவதை இலக்காக்க் கொண்டுள்ளது.


இலங்கைத் தூதரகம் 

றியாத்


No comments

Powered by Blogger.