Header Ads



கட்டாய ஜனாஸா எரிப்பு - CID விசாரணை ஆரம்பம்


(எப்.அய்னா)


கட்­டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்­ற­வியல் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. கொரோனா தொற்றால் உயி­ரி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­தவும், இன­வாத நோக்­கங்­களை கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­மாறும் கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டது.


மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அம­ர­சிங்க இந்த முறைப்­பாட்டை கடந்த 2024 டிசம்பர் 22 ஆம் திகதி பதிவு செய்­துள்ளார்.


இந்த முறைப்­பாடு பதில் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­ய­வினால், விசா­ர­ணை­க­ளுக்­காக கொழும்பு சி.சி.டி. எனும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்­டி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி அவரின் கீழ் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்ள நிலையில், நேற்று முறைப்­பாட்­டா­ள­ரான மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அம­ர­சிங்­க­விடம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்பட்­டுள்­ளது.


கொரோனா தொற்றின் முதல் முஸ்லிம் மரணம் பதி­வான 2020 மார்ச் 31 முதல் 2021 மார்ச் 5 வரை, கொரோ­னாவால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் கட்­டாய தக­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த கட்­டாய நட­வ­டிக்­கை­யா­னது, ஒரு திட்­ட­மிட்ட சதியின் வெளிப்­பாடு என்று சந்­தே­கிக்­கப்­படும் நிலையில், அதனை வெளி­ப்­படுத்­திக்­கொள்ள இவ்­வி­சா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.


பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்­யப்­பட்ட இந்த குற்­ற­வியல் நட­வ­டிக்கை கோரும் முறைப்­பாட்டில் கடந்த 2020 மார்ச் 31 ஆம் திக­தி­யாகும் போது சுகா­தார அமைச்­ச­ராக இருந்த பவித்ரா வன்னி ஆரச்சி, அதே காலப்­ப­கு­தியில் சுகா­தார அமைச்சின் செய­லாளர், சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரும் 2021.02.14 அன்று சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்­வது தொடர்பில் முடி­வெ­டுத்த தொழில்­நுட்பக் குழுவின் உறுப்­பி­னர்கள், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களை தகனம் செய்ய வேண்டும் என முடி­வுக்கு வர கார­ண­மாக இருந்த நிபு­ணர்கள் குழுவில் இருந்தோர் (சட்ட வைத்­திய ஆலோ­சகர் சன்ன பெரேரா, வைத்­திய ஆலோ­சகர் ஆனந்த விஜே­விக்­ரம, சட்ட வைத்­திய ஆலோ­சகர் ரொஹான் ருவன்­புர, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பி.பீ. தச­நா­யக்க, நுண்­ணு­யி­ரியல் ஆலோ­சகர் ஷிரானி சந்­ர­சிறி, நுண்­ணு­யி­ரியல் ஆலோ­சகர் மாலிக கரு­ணா­ரத்ன, வைத்­தியர் துல்­மினி குமா­ர­சிங்க, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பிரபாத் சேன­சிங்க, சட்ட வைத்­திய அதி­காரி சிரி­யந்த அம­ர­ரத்ன, பேரா­சி­ரியர் மெத்­திகா விதா­னகே, வைத்­தியர் ஹசித்த திசேரா) ஆகி­யோரை பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் என பெய­ரிட்டு குற்­ற­வியல் விசா­ரணை கோரி­யுள்ளார்.


குறிப்­பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்கள் மீதான இன­வாத அடக்­கு­முறை, அரச அங்­கீ­கா­ரத்­தோடு வியா­பித்­த­தாக குறித்த முறைப்­பாட்டில் சுட்டிக்கட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க, அதன் தொடர்ச்சியே கொவிட் தொற்றினால் மரணமடைந்த ஜனாஸாக்களை தகனம் செய்த நடவடிக்கை எனவும், அது முற்று முழுதாக முஸ்லிம்களை இலக்குவைத்தது எனவும் சுட்டிக்கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

– Vidivelli

No comments

Powered by Blogger.