கோட்டாபயவிடம் CID விசாரணை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment