மக்களின் கனவுகள் சாத்தியப்படாது
அரசாங்கம் வாக்களித்ததைப் போன்று வரிகளைக் குறைக்கவோ, பொதுமக்களின் வாகனக் கனவுகளை சாத்தியப்படுத்தவோ மாட்டாது என்று பாட்டளி சம்பிக ரணவக்க விமர்சித்துள்ளார்.
ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சம்பிக ரணவக்க தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், மின்சாரக் கட்டண குறைப்பில் இந்த அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலையிட்டு, மின்கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒருபோதும் எரிபொருள், மின் கட்டணங்களையோ வரிகளையோ குறைக்கப் போவதில்லை.
வாகன இறக்குமதி மூலம் 280 பில்லியன் வரி வருமான இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. அவ்வாறான நிலையில் சொந்த வாகனம் ஒன்று குறித்த பொதுமக்களின் கனவுகள் சாத்தியப்படாது என்றும் சம்பிக ரணவக்க விமர்சித்துள்ளார்.
Post a Comment