Header Ads



கருவாடு வாங்க விரும்புவதாகக் கூறியவர்கள் வர்த்தகர் மீது சூடு


மாத்தறை - தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் adaderana  செய்தியாளர் தெரிவித்தார்.


சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.


கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.


துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.