Header Ads



மற்றொரு வினாத்தாளும் வட்சப்பில் கசிவு - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை


வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக  வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.


அதன்படி இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


அதேநேரம், பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என சிறிமேவன் தர்மசேன மேலும் தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் மூன்றாம் தவணை பரீட்சையின் புவியியல் வினாத்தாளுக்கான விடைத்தாளும் முன்னதாக வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பிலும்,  விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வினாத்தாளை இரத்து செய்து புதிய வினாத்தாளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு வினாத்தாள் வெளியாகி உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.