ரோஹிங்கியர்கள் மீது இரக்கம், விருந்தோம்பல் செய்யுங்கள் - தத்தளித்தவர்களை மீட்ட இலங்கையர்களுக்கும் நன்றி
"இந்த புதிய வருகையாளர்களுக்கு தொடர்ந்து இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வழங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அவர்களில் பலர் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதுடன், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட வாரக்கணக்கில் கடல் பயணத்திற்கு ஏற்புடையதற்ற படகுகளில், பாதுகாப்பைத் தேடிப் பயணம் செய்கிறார்கள்," என்று UNHCR ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இவ்வாறானவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதையும் அவர்கள் உயிர்காக்கும் உதவியைப் பெறுவதையும் உறுதி செய்வதே UNHCR இன் முன்னுரிமை என்று அவர் மேலும் கூறினார்.
அவர்கள் அவசர உதவியைப் பெறக்கூடிய தற்காலிக தங்குமிடங்களை அரசாங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்று பேச்சாளர் தெரிவித்தார்.
UNHCR ஆனது இவ்வாறான அகதிகள் பாதுகாப்பு மற்றும் உதவிக்காக அரசாங்கம், UN மற்றும் NGO பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.
Post a Comment