அனுரகுமார அரசாங்கத்திற்கு, அர்சுனாவின் மிரட்டல்
நீதிமன்ற வழக்குகள்!
வெற்றிகரமாக 25வது வழக்கு!
வழமையாக நீதியை கேட்டுத்தான் வழக்கிடுவார்கள்..
இப்பொழுதெல்லாம் நீதியை கேட்பவர்களுக்கு எதிராகவே வழக்கிடுகிறார்கள்!
ஏழைகள் என்றால் நீதியை நிராகரித்துக் கொள்வார்கள்..
ஏழைகளுக்கு குரல் இருக்காது..
நீதிமன்றம் செல்வதற்கு பணம் இருக்காது..
அதனால் போலீசார் நினைத்ததை எல்லாம் வழக்குகளாக போட்டுக் கொள்வார்கள்..
படித்தவன் வைத்தியர் என்பதால் நினைத்து நினைத்து பொய் வழக்குகளை எல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்..
அரசாங்கத்திற்கு இப்போது நான் ஒரு தலையிடி!
அடுத்த உள்ளூராட்சி சபை தேர்தலும் மாகாண சபை தேர்தலும் என்வசம் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு தான் ஒவ்வொரு வழக்காக இட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
வழக்குகள் அல்ல நீங்கள் கொலை செய்தும் இராமநாதன் அர்ச்சனாவை இந்த வரலாற்றில் இருந்து நீக்க முடியாது!
முடிந்தால் கொலை செய்து பாருங்கள்!
தயாராகத்தான் இருக்கிறேன்..
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பை கூட உங்களால் வழங்க முடியாத அரசாங்கம்!
வாழ்க கிளின் ஸ்ரீலங்கா..
இதற்கு மேலும் அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் அரசாங்கம் என் மீது போலீஸ் கரம் கொண்டு நசுக்குமாக இருந்தால் அனுரகுமார மாலி மாவ அரசாங்கத்திற்கு மனதில் இருந்து வெளிப்படுத்திய ஆதரவை முற்றாக நிறுத்திக் கொள்வேன்..
உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் நெருங்குவதால் இன்னும் 14 நாட்கள் பெரும்பாலும் சிறை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்..
Post a Comment