தஸ்பீஹ் உருட்டிய விரல்கள்...
C.A.பரீட்சையில் தேறிய ஆலிம் G.முபாரக் நூறானி
மலப்புறம் மாவட்டத்தில் கொண்டோட்டி அருகில் உள்ள கொட்டுக்கரை கிராமத்தை சேர்ந்த முகம்மது ஹாஜி - கதீஜா தம்பதியர் மகன் முபாரக் நூறானி..
பத்தாம் வகுப்பு வரை ஊரிலுள்ள P.P.M.H.S Kottukara அரசுப் பள்ளியில் பயின்ற முபாரக் பின்னர் உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியும் கற்பிக்கும் மலப்புறம் பூனூரில் உள்ள ஜாமிஆ மதீனத்துந் நூர் அரபிக் கல்லூரியில் சேர்ந்து மேல்நிலை கல்வியும், இளங்கலை பி.ஏ பட்டமும், மார்க்க கல்வியில் "நூறானி" ஸனதும் தேர்ச்சி பெற்றவர்.
தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூர கல்வி மூலம் MBA படிப்பும், தான் படித்த அரபிக் கல்லூரியில் இயங்கும் Jamia C.A. Academy ல் பட்டய கணக்காளர் தேர்வுக்கும் படித்து வந்தார்.
நான்கு வருடங்கள் கடின உழைப்பும், கொச்சியில் உள்ள பிரபலமான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவனம் ஒன்றில் தொடர்ந்து மூன்று வருடங்கள் மேற்கொண்ட பயிற்சியும் C.A. தேர்வின் முதல் இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதித் தேர்வு முடிவுகள் மூன்று தினங்கள் முன்பு வெளியானதில் முபாரக் நூறானி தேர்ச்சி பெற்று அரபிக் கல்லூரியின் C.A.Foundation க்கு பெருமை சேர்த்துள்ளார்.
தஸ்பீஹ் உருட்டிய விரல்கள் இனி Balance Sheet ல் கையெழுத்து இடும்..
Colachel Azheem
Post a Comment