தஸ்பீஹ் உருட்டிய விரல்கள், ஸ்டெதஸ்கோப் பிடிக்கிறது....
கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா சேர்ந்த முகமது அமீன் - சபீபா தம்பதியர் மகன் சையது நுஃமான் நூரானி, வெண்ணக்கோடு கிராமம் சேர்ந்த அப்துல்லா ஸகாஃபி - நசீரா தம்பதியர் மகன் முஹம்மது ஸஹல் நூரானி, பரப்பின்பாயில் கிராமத்தை சேர்ந்த முஹம்மது மதனீ - அஸ்மா தம்பதியர் மகன் ஷம்மாஸ் நூரானி ஆகியோர் கேரளாவில் ஆலிம் மருத்துவர் எனும் சிறப்பு பெற்றுள்ளனர்.
காரந்தூர் காதிரிய்யாவில் ஆரம்ப கல்வி பயின்றவர்கள் ஜாமிஆ மதீனத்துந் நூர் அரபிக் கல்லூரியில் பயின்று முதல் அறிவியல் பிரிவு மாணவர்களுடன் நூரானி ஸனதும் தேர்ச்சி பெற்ற பின்னர் மர்க்கஸ் யூனானி கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தவர்கள்...
Bachelor of Unani Medicine and Surgery ஐந்தாண்டு படிப்பு பூர்த்தி செய்த மூன்று ஆலிம்களும் BUMS பட்டம் பெற்று யூனானி மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராகியுள்ளனர்.
ஆலிம் டாக்டர்களான இவர்கள் மூவரில் இரண்டு பேரின் தந்தையும் ஆலிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிம் டாக்டர்களான மூவரும் மர்க்கஸ் யூனானி கல்லூரி சேர்மன் ஏ.பி.அப்துல் ஹகீம் அஸ்ஹரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Colachel Azheem See less
Post a Comment