இருதரப்பு மத்தியஸ்தராக கரு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் இணைவு தொடர்பான பேச்சுவார்த்தையின் இருதரப்பு மத்தியஸ்தராக கரு ஜயசூரிய முன்மொழியப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகள் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயலாற்றுவது தொடர்பான அடிப்படை புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
இதன் ஒருகட்டமாக அண்மையில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் இருதரப்பையும் இணைக்கும் முயற்சிகளின் பாலமாக செயற்படுவதற்கும், இருதரப்பு மத்தியஸ்தராக செயற்படுவதற்கும் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன் பிரகாரம், இரு கட்சிகளின் இணைவு மற்றும் அதன் பின்னர் ரணில் , சஜித் ஆகியோருக்கான பதவி மற்றும் அதிகாரங்கள் என்பன தொடர்பான விடயங்களை கரு ஜயசூரியவே தீர்மானிக்கவுள்ளார்.
ரணில் மற்றும் சஜித் தரப்பு அதற்கான ஒப்புதலை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
Post a Comment