Header Ads



ஐஸ் விற்ற, பட்டதாரி யுவதி


டுபாயில் தலைமறைவாகி இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருட்களை   விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 20 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தயுவதி, இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் இரண்டு பட்டங்களை பெற்றுள்ளதாகவும், வெளிநாடு செல்வதற்கு தேவையான பணத்தை திரட்டுவதற்காக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஹன்வெல்ல நகரில் யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருள் விநியோகம் செய்வதாக ஹன்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ். இராஜசிங்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று சென்று சந்தேக நபரான யுவதியை கைது செய்தது.


ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள துபாய் குற்றவாளியின் போதைப்பொருள் வலையமைப்பின் பொறுப்பாளருடன் அவரது உறவினருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், சந்தேக நபர் அந்த உறவின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை பெற்று விற்பனை செய்துள்ளார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.


ஹங்வெல்ல நகருக்கு அருகில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.