Header Ads



குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறார் ஆளுநர் ஹனீப் யூசுப்


சோதனை செய்யப்படாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் தம் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் தெரிவித்தார்.


அந்த கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்தக் குற்றச்சாட்டுகளால் தான் வருத்தமடைந்ததாகவும் ஆளுநர் கூறினார்.


தான் ஒருபோதும் அரசியல் செய்ய வரவில்லை என்றும், மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாண மக்களுக்கு பயனுள்ள பணிகளை மேற்கொள்வதே தனது நோக்கம் என்று கூறினார்.


அண்மையில் துறைமுகத்திலிருந்து சோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஸ் யூசுப் இறக்குமதி செய்த கொள்கலன்களும் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.