Header Ads



பிக்கு மாணவர்களின் பல்கலைக்கழகம் இழுத்து மூடப்பட்டது


அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.


பிக்கு மாணவர்கள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் அறிவித்துள்ளார்.


பல்கலைக்கழகத்தின் அனைத்து பிக்கு மாணவர்களுக்கும் நாளை(11) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.


புதிதாக இணைந்த பிக்கு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 பிக்கு மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி பல்கலைக்கழகத்தின் சில பிக்கு மாணவர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று(10) ஐந்தாவது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிக்கு மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தோற்றவும் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.