அநுரகுமார அரசாங்கத்திற்கு அமெரிக்கா தூதுவர் பாராட்டு
ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் பொறுப்பிலும், இந்த வருட இறுதியில் மாற்றம் ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார்.
இந்தநிலையில், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார கலாசாரத்தை மீட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட "தூய்மையான இலங்கை" திட்டத்தை யும் அமெரிக்க தூதுவர் பாராட்டி பேசியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஐஎம்எப் திட்டத்துடன் தொடர்ந்து செயல்படுவதற்கும் அதன் சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், இணைந்து பணியாற்றும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்திரத்தன்மை ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் நிலையான பொருளாதார நடைமுறைகளை வளர்ப்பதில் மிகவும் சவாலான பணி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment