Header Ads



லசித் மாலிங்கவின் 𝐊𝐈𝐋𝐋𝐄𝐑


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.


இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.


இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு பற்றிய 21 விடயங்கள் உள்ளன.


புத்தக வெளியீட்டு விழாவில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய, மாவன் அத்தப்பத்து, மஹெல ஜெயவர்தன, சமிந்த வாஸ், அஜந்த மெண்டிஸ் மற்றும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.


இதேவேளை, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


லசித் மாலிங்க எழுதிய புத்தகத்தை முதலாவதாக அவரது தந்தை ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிடம் வழங்கினார்.

No comments

Powered by Blogger.