Header Ads



காஸாவில் போர்நிறுத்தம் எட்டப்பட்டது, கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர் - டிரம்ப்


காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


"மத்திய கிழக்கில் உள்ள பணயக்கைதிகளுக்கான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது," என்று அவர் சமூக ஊடக தளமான Truth Social இல் கூறினார்.


“அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நன்றி!”


அத்தகைய ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments

Powered by Blogger.