மகிழ்ச்சியாக வாழ சில ஆலோசனைகள்..
◼ உங்களுக்கு பொறுத்தமான ஒருவரை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் 80% மகிழ்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும்.
◼ உங்கள் முதல் குறிக்கோள் உங்கள் குடும்பத்தின் சுக வாழ்வாக இருக்கடடும். அவர்களின் ஆனந்தத்தில் தான் உங்கள் ஆனந்தம் தங்கியுள்ளது.
◼ உங்கள் உறவினர்களுக்காக, உங்கள் நண்பர்களுக்காக, உங்கள் நாட்டிற்காக உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.
◼ கடந்த காலத்தை நினைத்து உங்களை நீங்களே அடித்துக் கொள்ளாதீர்கள், விட்டுவிடுங்கள், மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்.
◼ ஒவ்வொரு நாளும் யாரவது ஒரு மனிதனுக்கு, அல்லது ஒரு உயிரினத்துக்கு உபகாரம் செய்யுங்கள், எடுத்து மகிழ முன்னர் கொடுத்து மகிழுங்கள்.
◼ நீங்கள் பசித்திருப்பதா, கடன் வாங்குவதா? என்ற இரு தேர்வுகள் வரும் போது பசித்திருப்பதை தேர்வு செய்யுங்கள்.
◼ பசித்திருக்கும் நிலையோ, அல்லது யாரிடமாவது கையேந்தும் நிலையோ வராமல் இருக்க, உங்கள் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை ஆவது சேமிக்ப் பழகுங்கள்.
◼ நீங்கள் முதன் முதலாக காணும் மனிதர்களுடனும் நீண்ட கால நண்பர்கள் போல நடந்துகொள்ளுங்கள்.
◼ ஒரு வேலையை பொறுப்பெடுத்தால், அதில் நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்து கொள்ளுங்கள்.
◼ எப்போதும் ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். தவறுகள் நடந்தால் கூட ஏற்கும் மனோநிலையில் இருந்து கொள்ளுங்கள்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment