தம்பியை காண ஓடிச்சென்ற நாமல் - கைது பற்றி அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் யோசித்தவை காண வந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பாரிய சவாலாக எடுத்துக் கொண்டு இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன்போது அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கம் தேர்தல் மேடைகளில் எவ்வளவு பொய்களை கூறினாலும், அவற்றை நீதிமன்றின் முன்னால் நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினரையும் எப்சிஐடி பிரிவினரை வைத்து வழக்குகளையும் பொய்யாக சாட்சிகளையும் உருவாக்கினாலும் நீதிமன்றத்தின் முன் அனைத்தும் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு மற்றும் காணியை சந்தேகத்திடமான முறையில் வாங்கியது தொடர்பாக நாமல் ராஜபக்சவின் சகோதர் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், குறித்த கைது நடவடிக்கையின் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கல் செயல்பாடும் இல்லை என அரசாங்க தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment