தென் கொரிய விமான விபத்தையடுத்து, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் சில நிலையான நிர்மாணங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணங்களை அகற்றுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 179 உயிர்கள் பலியாகியமையை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விமான நிலையத்தின் நிலையான நிர்மாணத்துடன் தொடர்புடைய இடர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சிவில் விமான சேவை அதிகார சபையையும் வலியுறுத்தி இலங்கை விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் முன்னதாக எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.
அதன்போது, சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் காலி வீதியின் எல்லையில் உள்ள 9 கன அடி சுவர் தொடர்பில் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கட்டமைப்பினால் முவான் விமான நிலைய அனர்த்தம் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ள சங்கம், சுவரை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment