Header Ads



அர்ச்சுனாவை உடனடியாக பிடிக்கவும் - நீதிமன்றம் உத்தரவு


யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.



பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.


இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.


பின்னர், அர்ச்சுனா ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.