ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது
ஒரு கோடி ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மற்றும் 58 ஆயிரம் ரூபா வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களை நீர்கொழும்பு பிராந்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் ஆலோசனைக்கினங்க ஏத்துக்கால பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து பரிசோதித்த போது கஞ்சா பொதிகளும், சிகரட் காட்டூன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு கிலோ கிரம் எடையுள்ள 17 பார்சல்களில் பொதிசெய்யப்பட் 35 கிலோ கிராம் 565 கிராம் கஞ்சாவும் 600 வெளிநாட்டு சிகரட்டுகளும் இருந்துள்ளன.
பிரதான சந்தேக நபரின் தந்தையும் இதற்கு முன்னர் பல தடவை கஞ்சா தொடர்பாக கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிராந்திய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத், பொலிஸ் கான்ஸ்டபல்களான சேனாதீர(86500), சஞ்ஜீவ(33113), திஸாநாயக்க(37927), வன்னிநாயக்க(37928) ஆகியோர்களே இந்த சுற்றிவலைப்பைச் செய்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைபற்றப்பட்ட கஞ்சா மற்றும் சிகரட்டுகளையும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Post a Comment