இலங்கை வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
- டி.கே.ஜி.கபில -
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-226 காலை 05.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க, சீனாவின் Guangzhou இல் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-881 மற்றும் இந்தியாவின் பெங்களூரில் இருந்து 05.05 க்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ். UL-174 ரக 03 விமானங்களை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து காலை 06.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-730, இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த விமானங்களில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்படவில்லை.
வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பின.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசத்தில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காலை 07.00 மணியளவில் படிப்படியாக மறைந்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து விமானங்களும், திரும்பிச் செல்லாமல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
Post a Comment