நாடு செல்லும் போக்கில், எதிர்காலத்தில் என்ன நிலைமை ஏற்படும் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்
ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன் மூலம் நாட்டில் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடு செல்லும் போக்கில் எதிர்காலத்தில் என்ன நிலைமை ஏற்படும் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
அதுதொடர்பில் நான் தெரிவிக்க தேவையில்லை. நாடு எந்த திசைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைமை ஏற்படும் என்பதை அறிந்தே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுபவமுள்ளவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு திரும்பத் திரும்ப தெரிவித்து வந்தார்.
ஆனால் எமது நாட்டு மக்கள் அனுபவமுள்ளவர்களை நிராகரித்துவிட்டு, நாட்டின் பொறுப்பை அனுபவமற்றவர்களுக்கு வழங்கினார்கள்.
இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு பாெங்கல் சமைக்க அரிசி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனக்கு தெரிந்தளவில் இவ்வாறானதொரு நிலைமை இந்த முறையே ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பச்சை அரிசி ஒரு கிலாே 400ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரணில் விக்ரமசிங்க இலவசமாக அரிசி வழங்கியதாலே அரசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து புதுமையாக இருக்கிறது” என்றார்.
Post a Comment