Header Ads



சுவிட்சர்லாந்தில் இப்படியும் நடந்தது


சுவிட்சர்லாந்திலுள்ள ட்ராவல் ஏஜன்சி ஒன்றிற்கு, சுமார் 750 பேர் கையில் எக்கச்சக்கமான பணத்துடன் சென்றதைத் தொடர்ந்து பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


சுவிட்சர்லாந்தின் Lucerne நகரில் அமைந்துள்ள ஒரு ட்ராவல் ஏஜன்சிக்கு சுமார் 750 பேர் கையில் எக்கச்சக்கமான பணத்துடன் சென்றதை பொலிசார் கவனித்துள்ளார்கள்.


ட்ராவல் ஏஜன்சிக்கு எக்கச்சக்கமான பணத்துடன் 750 பேர் சென்றதால் பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் | Lucerne Police Smash Drugs Operation Under Nose


தங்கள் பொலிஸ் நிலையத்தின் ஜன்னல் வழியாக அந்தக் காட்சிகளைக் கண்ட பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசாருக்கு, தங்கள் கண் முன்னேயே அந்த கட்டிடத்தில் ட்ராவல் ஏஜன்சி என்ற பெயரில் போதைப்பொருட்கள் கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது.


சுமார் 7 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு அங்கு போதைப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.


அந்த விடயம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.