இலங்கையின் பெற்றோலியத் துறை அபிவிருத்தி தொடர்பில் சவூதியுடன் கலந்துரையாடல்
இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி, வெளிவிவகார அமைச்சில் பிரதி வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேரில் சந்தித்தார்.
இலங்கையின் பெற்றோலியத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா, மத்திய கிழக்குப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி.சஞ்சு தசநாயக்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.மயூர நெத்திகுமாரகே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். விவாதம்.
Post a Comment