Header Ads



கடத்தப்பட்ட மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ள விடயம்


- அததெரண -

கம்பளை, தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


சந்தேக நபரும் மாணவியும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்ததோடு, ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தெரிவித்தார்.


தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.