இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த இணக்கம் பற்றி கசிந்துள்ள தகவல்கள்
இஸ்ரேலிய ஊடகங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்களை கசிய விட்டுள்ளன.
இது மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது:
முதற்கட்டமாக காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட 33 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். இதையொட்டி, ஒவ்வொரு பெண் சிப்பாய்க்கும் ஈடாக 50 பாலஸ்தீனிய கைதிகளையும், சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள பொதுமக்களுக்கு ஈடாக 30 பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும்.
ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் முடிவில், காசா மற்றும் எகிப்து எல்லைகளுக்கு இடையே உள்ள பிலடெல்பி நடைபாதையில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் கட்டமாக 16 நாட்கள் போர்நிறுத்தம் தொடங்கும் மற்றும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள ஆட்களையும் வீரர்களையும் விடுவிக்க பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும்.
ஒப்பந்தத்தின் மூன்றாவது கட்டமானது, காஸாவில் மாற்று அரசாங்கத்தை நிறுவுவது மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட நீண்ட கால ஏற்பாடுகளை நிவர்த்தி செய்யும்.
அறிக்கையிடப்பட்ட ஒப்பந்தம் பற்றிய பிற விவரங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன, சர்வதேச அமைப்பால் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் இஸ்ரேல் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்களை வடக்கு காசா பகுதிக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்
தகவல் மூலம் - Aljazeera
Post a Comment