Header Ads



நாட்டில் பிறப்பு வீதம் குறைவினால் ஏற்படப்போகும் பாதகம்


நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 247,900 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் பிறப்பு விகதம் குறைவு என்பதில் நாட்டில் பல்வேறு வகையாக பிரச்சினை உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எதிர்காலத்தில் பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். அத்துடன் தொழில்துறைகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கவும் நேரிடும் அபாயம் உள்ளது.


இதற்கிடையில், நாட்டில் முதியோர் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.


இதனால் சுகாதார சேவைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுகாதார செலவு கடுமையாக அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.


நாட்டில் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.