Header Ads



வருமுன் காப்போம்...!


இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காற்று மூலம் தற்பொழுது அதிக மழை பொழிந்து கொண்டிருக்கின்றது. 


தாழ்நிலைப் பிரதேசங்கள் எங்கும் மழைநீர் தேங்கி நிற்கின்றது சில இடங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் நடமாட்டம் அந்த நீரின் ஊடாகவே மக்கள் நடமாட்டம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 


மலசல கூடங்கள் பொங்கிய நிலையில், மனசுல கூடத்தின் குழிகள் உடைந்து வெள்ள நீருடன் கலந்த நிலையில் ,அசுத்தமானபல தேங்கி கிடந்த வடிகான்கள், கால்நடைகளின் கழிவுகள் , சந்தை கழிவுகள் , கோழிப் பண்ணைகளின் கழிவுகள் உட்பட பல்வேறுபட்ட ஆபத்தான கழிவு பொருட்களை கடந்து சுமந்து வருகின்ற வெள்ள நீரானது  பல்வேறு பட்ட நோய்க்கிருமிகளையும் அசுத்தங்களையும் பெருமளவில் கொண்டிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.


குறிப்பாக  Salmonella,Leptospira (causes leptospirosis),Vibrio cholerae (causes cholera), போன்ற பாக்டீரியாக்களும் , போன்று Hepatitis A,Rotavirus,Norovirus வைரஸ்களும் Giardia lamblia,Cryptosporidium போன்ற ஒட்டுண்ணிகளும் இந்நீரில் பொதுவாக காணப்படலாம்.


மக்களில் பலர் சர்க்கரை வியாதி மற்றும் தொற்றா நோய்கள் உள்ளவர்களாக காணப்படுகின்றார்கள். இவ்வாறு சர்க்கரை வியாதி மற்றும் பிற பிணிகளினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு இலகுவில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.


அசுத்தமான வெள்ள நீரின் ஊடாக நடமாடும் பொழுது அந்நீரிலே தொடுகையுறுகின்ற கால் பகுதிகள் குறித்த நோய் கிருமிகளினால் இலகுவில் தொற்றுக்குட்பட்டு பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதன் போது செல்லுலைட்டீஸ் (cellulitis)எனும் ஒரு தொற்று நிலை ஏற்பட்டு மக்கள் அவதியுற வாய்ப்பு உண்டு.


எனவே தேங்கி நிற்கும் மழை நீர் வெள்ள நீர் என்பவற்றிலே நடந்து திரிவதனை தவிர்த்துக் கொள்வதோடு மிக முக்கியமான காரணங்களுக்காக நடமாடுபவர்கள் நீரில் நடமாடி முடிந்ததன் பின்னர் உடனடியாக நனைந்த கால் பகுதிகளை நன்றாக சவர்க்காரமோ பெட்ரோல் பாவித்து கழுவி உலர்த்திக் கொள்ளுங்கள். 


சிலரது வீடுகளினுள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்கள் வெள்ள நீரிலே தொடர்ந்து நடமாடுவதை தவிர்க்க கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். 


வந்தபின் வைத்தியசாலைக்கு அலைந்து விடுதியில் தங்கி இருந்து உங்களது பொன்னான காலங்களை கழிப்பதில் இருந்து விடுபட்டு வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்!

ஏனென்றால் வைத்திய சாலையில் தங்கியிருக்கும் நாட்களில் பல்வேறு தனிப்பட்ட அல்லது குடும்ப ரீதியான அசௌகரியங்களுக்கு நாம் உள்ளாகவேண்டி ஏற்படலாம்.


உமர் அலி எம் இஸ்மாயில் 

ஆதார வைத்தியசாலை

நிந்தவூர்.

2025:01:16

No comments

Powered by Blogger.