மீண்டும் பெயர் மாற்றம்
கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த யாழ் கலாசார மையத்தின் பெயர் "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் " என தற்போது மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது கடந்த 18 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக ''திருவள்ளுவர் கலாசார மையம்'' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment