Header Ads



வாழ்வென்றால் போராடும் போர்க் களமே


மனித உரிமை செயற்பாட்டாளர் Reny Ayline பதிவு!


பல வருடங்களுக்கு முன்பு, கிரீன் வேலியில்(கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம்)  நடந்த ஒரு கோடைக்கால பயிற்சி முகாம். வகுப்பு முடிந்ததும், அதிக உயரம் இல்லாத, மெலிந்த ஒரு மாணவி எழுந்து நின்று சந்தேகங்கள் கேட்டாள். 


அத்துடன் முடியவில்லை, உணவுக்கூடத்திற்கு வந்த பிறகும் அவள் என்னிடம் மீண்டும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள்.


பிறகு பல வருடங்கள் கழிந்தன. ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில், செய்யாத குற்றத்திற்காக அவளுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் துன்பகரமான நாட்களில் அவள் என்னிடம் கேட்டாள்: 


"ரெனியண்ணா, உண்மையச் சொல்லுங்க, என் கணவருக்கு ஜாமீன் கிடைக்குமா?"


அதற்கு நான் அவளிடம், "இப்போது  அதைப்பற்றி எல்லாம் யோசித்து நீ கவலைப்பட வேண்டாம். நன்றாக படி" என்று சொன்னேன்.


அனுபவங்களின் கொடுமையிலும், துன்பத்திலும் வாடியபோதும் அவள் படிப்பைத் தொடர்ந்தார். 


இறுதியில் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துத் தனது கனவை நனவாக்கினார். 


பாத்திமா, இந்த வெற்றி உன்னுடையது மட்டுமல்ல, உனது கணவர் ரவூப் ஷரீஃபின் வெற்றியும்கூட.


வழக்கறிஞர் ஃபாத்திமா பத்தூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

No comments

Powered by Blogger.