Header Ads



இறைவனின் அற்புதமான படைப்பு

 


உங்களுக்குத் தெரியுமா?


🦅 ராஜாளி கழுகின் கூர்மையான கண்கள் போன்ற கண்கள் உங்களுக்குக் கொடுக்கப்படிருந்தால், 10 மாடி உயர கட்டிடத்திலிருந்து கீழே ஊர்ந்து செல்லும் எறும்பை உங்களால் பார்க்க முடியுமாக இருந்திருக்கும். 


🦅 மேலும் புற ஊதாக் கதிர்களைப் பார்ப்பீர்கள். 360 டிகிரி கோணத்தை கொண்டவர்களாக இருப்பீர்கள். வண்ணங்களை இதுவரை பார்த்திராத விதத்தில் நீங்கள் காண்பீர்கள். 


🦅 கழுகின் கண்கள்தான் விலங்குலகில்  மிகவும் கூர்மையான கண்ணாக கருதப்படுகிறது. சராசரி மனிதனின் பார்வையை விட 4 முதல் 8 மடங்கு கூர்மை கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. 


🦅 ஒரு கழுகு சாதாரணமாக வானத்தில் 3.2 கிமீ தொலைவில் இருந்து ஒரு முயலைக் கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டது.  இவ்வளவுக்கும் கழுகின் எடை வெறும் (4.5 கிலோ) வாகும். அதன் கண்கள் மனிதக் கண்ணின் அளவைப் போலவே இருக்கும்.


🦅 கழுகு தன் இரையை பிடிக்க வானிலிருந்து வேகமாக தரை இறங்கும் போது, ​​அதன் கவனம் சிதறாமல் இருக்க கண்களில் உள்ள தசைகள் கண்ணின் வளைவை தொடர்ந்து சரி செய்து கொண்டே இருக்கும்.


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.