Header Ads



தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து கவலையான தகவல்


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளது.


 இறக்கும் போது இதற்கு சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


இந்தோனேசியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் பிறந்தது.


இதன் மரணம் குறித்து உயிரியல் பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒராங்குட்டான் விலங்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாக தெரிவித்தார்.


எவ்வாறாயினும், ஒராங்குட்டான் விலங்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.