பெண்கள் அலங்காரம் செய்யக்கூடாது என்றாலும் ஆச்சரியம் இல்லை
அரிசி , தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அவர் உரையாற்றும் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,பண்டிகைக்காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அரசாங்கத்துக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டும் என இராதாகிருஸ்ணன் கூறினார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை தாம் வரவேற்பதாகவும் ஆனால் க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற போர்வையில் மக்களை துன்பப்படுத்தும் ஒருசில செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டிகளில் உள்ள அலங்காரப்பொருட்களை அகற்ற சொல்பவர்கள் எதிர்காலத்தில் பெண்கள் ஒப்பனை அலங்காரம் செய்யக் கூடாது என்றாலும் ஆச்சரியம் இல்லை என இராதாகிருஸ்ணன் கூறினார்
இதேநேரம் இராதாகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதில் வழங்கியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்களை தாம் வரவேற்பதாகவும் எனினும் ஒருசில தவறான விடயங்களை முன்வைத்திருப்பது கவலைக்குரிய விடயம் என இராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.
க்ளீன் ஸ்ரீலங்கா தொடர்பில் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் தவறானவை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
Post a Comment