பூமிக் கிரகத்தில் மனிதனே, மிகவும் கொடூரமான மிருகம்
லைபீரியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மண்டை ஓடுதான் இது.
நெற்றியில் அடிக்கப்பட்ட ஆணி தலையின் பின்பகுதியால் வெளியே வரும் வரை சித்திரவதை செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
லைபீரியாவில் இது போன்ற பல மண்டை ஓடுகளோடு பண்டைய காலத்து ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதை வைத்து, குறித்த காலப்பகுதிகளில் போர்களில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் எதிரிகளின் தலைகளையும் அவர்களின் ஆயுதங்களையும் சேமித்து வைத்து பெருமைப்பட்டிருபார்கள் என்பதாக ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.
வரலாற்றை நாம் படிக்கும்போதுதான், இந்த பூமிக் கிரகத்தில் மனிதனே மிகவும் கொடூரமான மிருகமாக இருந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment