சுடர்விட்ட இஸ்லாமிய ஸ்பெயின், அஸ்தமனம் ஆன நாள்
சரியாக 531 ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ஒரு நாளில் இந்த மேற்கு வானில் உதய சூரியன் மட்டும் அஸ்தமனம் ஆகவில்லை! எண்ணூறு வருடங்கள் சுடர்விட்ட தன்னிகரற்ற இஸ்லாமிய ஸ்பென் நாகாரீகம் அஸ்தமனம் ஆன நாளும் அதுவே, வசந்த ஸ்பைன் வாடிப் போன நாளும் அதுவே!
தளபதி மூஸா பின் நுஸைரின் உத்தரவின் பேரில் மாவீரர் தாரிக் பின் ஸியாதின் தலைமையில் சென்ற படை ஐபீரிய தீபகற்பத்தை ( இன்றைய ஸ்பைன், போர்த்துகள்) இலகுவாக கைப்பற்றி பிரஞ்சு தேசத்தின் பின் கதவை தட்டியது.
பின்னர் எண்ணூறு வருடங்கள் நீடித்த இந்த நாகரீகம் நீதிக்கான ஒளிவிளக்காக, சமத்துவத்துக்கான எடுத்துக்காட்டாக, கலைஞானங்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தது. குரோதுபா நகர் ஐரோப்பியர்கள் நாடிவரும் ஏகபோக பல்கலைக்கழகமாக இருந்தது. இஷ்பீலியா நகர் எழில் கொஞ்சும் பூங்காவாக இருந்தது, முழு ஸ்பெனும் நாகரீகங்களின் தொட்டிலாக இருந்தது.
பின்னர் அங்கே உட்பிரிவுகள் அதிகரித்தன, குழுவாதங்கள் மேலோங்கின, அரசியல் கதிரைக்காக அடித்துக் கொண்டனர். சுகபோக வாழ்வில் முழ்க ஆரம்பித்தனர். இஸ்லாமிய அந்தலூசியாவின் நகரங்கள் வீழ்ச்சி காண ஆரம்பித்தன.
கடைசியாக 200 வருடங்களாக தாக்குப்பிடித்த கிரனாடா ராஜ்ஜியமும் கி. பி 1492 ஜனவரி 2ல், சுல்தான் அபூ அப்துல்லா அவர்களால் கத்தோலிக்க மன்னர் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அத்தோடு சுடர் விட்ட ஒரு நாகரீகத்தின் திரை மூடப்பட்டது.
இஸ்லாமிய ஸ்பென் வீழ்ச்சி பற்றி பாடப்பட்ட பிரபல இரங்கள் கவிதைதான் இது.
ஒவ்வொன்றும் நிறைவை
அடையும் போதே குறையும்
வந்து விடும்-
நல்வாழ்வு கிடைக்கப் பெற்ற
எந்த மனிதனும் கர்வம்
கொள்ள வேண்டாம்-
நீ பார்ப்பது போலவே,
மாறிமாறி வருவதே
காலமென்பது-
சிலகாலம் இன்பம் கிடைக்கப்
பெறும் மனிதன், பலகாலம் துன்பப்படவேண்டி வரும்-
குர்துபா நகருக்கு என்ன ஆனது...?
எத்தனை பல மகத்தான
அறிஞர்கள், மேதைகள்
அங்கே பிரகாசித்தனர்!
பள்ளிவாசல்கள்,
தேவாலயங்களாக மாறிவிட்டன.
ஆலய மணிகளும், சிலுவை சின்னங்களுமே இடம்பிடித்துவிட்டன.
அசைவற்ற மிஹ்ராப்களும் கதறி அழுகின்றன! குச்சிகளிலான மிம்பர் மேடைகளும் இரங்கள் பாடுகின்றன.
அப்பாவிகள், பலவீனவர்கள்
தப்பிக்க மன்றாடினார்களே!
சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டும் கூட எந்த மனிதனின் மனமும் அசையவில்லை!
ஈமானும் இஸ்லாமும் மனதில் குடியிருந்தால்,
இதற்காகவே துயரத்தால் மனமுருக வேண்டுமல்வா?
கவிதை /அபுல் பகா ரன்தி - அந்துலூசிய கவிஞர்
தமிழாக்கம் / imran farook
Post a Comment