நாய்க்கு தூக்குத் தண்டனை - இலங்கையில் மத்தியஸ்த சபையின் கொடூரத் தண்டனை (படங்கள் இணைப்பு)
சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார், இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,
இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு) சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு) தபால் உத்தியோகஸ்த்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் வழங்கிய தீர்ப்பு கொடூரத்தின் உச்சம் எனலாம்.
குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது, சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டதையடுத்து, இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இணக்கசபையில் இருந்த நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, குறித்த நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
அதன் பிறகு நீதவான்கள் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன கொடுமையான தண்டனை, ஐந்தறிவு உயிரை எப்படி கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.
Post a Comment